Published : 11 Aug 2022 06:11 AM
Last Updated : 11 Aug 2022 06:11 AM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.11 - 17

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: ராசியில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம்.

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலை தூக்கும். சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்க பெறுவீர்கள். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல உத்தியோக வாய்ப்புகள் வரும்.

பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

பரிகாரம்: திங்கள் கிழமையில் அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

***********

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள்.நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். போட்டிகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். ராசிநாதன் சூரியன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் நவகிரகத்தில் சூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சினை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

***********

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நன்மையை தராவிட்டாலும் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். பெண்களுக்கு எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x